Is On The Net Dating Really Secure?
பொதுவாக அனைத்து தொழில்களிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது சூழ்நிலை மற்றும் அனுபவ அறிவு இல்லாததால் ஏற்படும் நஷ்டம்.
தங்களுக்காக சில உதாரணங்களை குறிப்பிட்டுள்ளேன்.
பொதுவாக புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மற்றவர்கள் இந்த தொழிலில் இவ்வளவு வருமானம் சம்பாதிக்கிறார்கள் என்றும், நாம் அந்த தொழிலை செய்தால் நம்மால் அவர் அளவுக்கு பணம் சம்பாதிக்க இயலும் என்று எண்ணி அந்தத் தொழிலை செய்ய முற்படுவார்கள். இதுவே நஷ்டத்தின் முதல் படிநிலை. ஏனென்றால் அவருக்கு அந்தத் தொழிலில் அனுபவம் அல்லது துறைசார்ந்த இயல்பான தகவல்கள் தெரியாது.
👉 உதாரணமாக கொரோனா காலத்தில் முக கவசம் மற்றும் சானிடைசர் வாங்கி விற்கும் தொழில் பொருளின் தரம் அல்லது அதை பற்றிய நுண்ணறிவு ஏதுமின்றி ஏனோதானோ வாக சந்தையின் விலையை பற்றி அறியாமல் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் விலையை மனதில் கொண்டு வாங்கியிருப்பார்கள். இதனால் பொருளின் தரத்தையோ அல்லது விலையிலோ பெரிய பிரச்சனையில் வாங்கிய பொருளை விற்க முடியாமல் நஷ்டம் ஏற்படும்.
👉 சிலர் யூட்யூபில் வரும் மொத்த வியாபார தொழிலான காய்கறிகள் பூ வகைகள் மற்றும் பழங்கள் தொழிலை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவும் வாங்கி விற்க திட்டமிட்டு வாங்கி வருவார்கள். அவர்களுக்கு சரியான தரத்தை கண்டறியும் நுண்ணறிவும் மற்றும் இந்த தொழிலில் ஏற்படும் பிரச்சனை அறியாமல் விற்க முயலுவார்கள். ஒரு கட்டத்தில் அதை விற்க முடியாமல் பொருள்கள் அழுகிய நிலையில் தினமும் மனமுடைந்து வெறுத்துப் போய் கேட்ட விலைக்கு கொடுத்து விட்டு போய் விடுவார்கள். இதனால் நஷ்டம் அடைந்தவர்கள் ஏராளம் (யூடியூப் பார்த்து புதிதாக தொழில் தொடங்கியவர்கள் வெங்காயம், வாழைப்பழம், சில வகைப் பூக்கள் இவை அனைத்தும் பெரிய பெரிய அளவில் அனுபவம் இல்லாதவர்கள் வீழ்ச்சியடைந்த தொழில்கள்)
👉 சிலர் சமூக வலைதளம் மற்றும் செய்தி நாளிதழ் போன்றவைகளில் ஊதுபத்தி, கற்பூரம், மெழுகுவர்த்தி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பேப்பர் கப் மற்றும் தட்டு வகைகள் போன்ற தொழில்களை தொடங்கி நஷ்டம் அடைவார்கள். அதாவது இவர்களுக்கு லாபம் சம்பாதிக்கும் எண்ணம் மட்டுமே இருந்திருக்கும் அதன் பின்னே உள்ள தொழில் நுணுக்கங்கள் மற்றும் விற்பனை திறன் இல்லாத காரணத்தினால் அவர்கள் பொதுவாக தோல்வி அடைகிறார்கள். விளம்பரப் படுத்தியவர்கள் சொல்லிய திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் (buy back agreement) நம்பி ஏமாறுவார்கள். நாம் செய்து கொண்டு செல்லும் பொருட்களை தரம் இல்லை என்று பொதுவாக வாங்க மறுப்பார்கள். இந்தத் தொழிலில் 90% ஏமாற்றும் நபர்கள் அதிகம். ஒரு கட்டத்தில் தானே இந்த பொருட்களை சந்தை படுத்தலாம் என்று இவர்கள் முயற்சி செய்து ஒரு கட்டத்தில் இந்தத் தொழிலைவிட்டு வெளியேறுவார்கள். விளம்பரம் செய்தவரின் நோக்கம் எந்திரத்தை விற்பதும் மற்றும் உப பொருட்களை விற்பது ஆகும்.
மேற்கூறிய அனைத்து தொழில்களும் வெற்றி பெற்று இன்றுவரை நிலைத்து நிற்பவர்கள் இந்தத் தொழிலில் சிறுக சிறுக தான் கற்றுத் தேர்ந்த அறிவு மற்றும் பொறுமை மட்டுமே காரணம்.
இதுபோல பல வகையான உதாரணங்கள் உள்ளது ஆனால் அனைத்து தொழில் நஷ்டத்திற்கு முக்கிய காரணம் நாம் தேர்ந்தெடுக்கும் துறை மற்றும் பொருளின் நுண்ணறிவு, சந்தை விலை, சந்தைப்படுத்தும் திறன், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டமிடல் இவையே பிரதான காரணிகள்.
என்னால் முடிந்த அளவுக்கு பல தொழில் முனைவோர்களுக்கு மற்றும் தொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கும் இலவச மார்க்கெட்டிங் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். இந்த ஆலோசனை முற்றிலும் இலவசமே எங்களின் முக்கிய நோக்கம் பலவகையான வியாபாரத்தை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதாகும்.
இலவச மார்க்கெட்டிங் ஆலோசனைகளுக்கு 9940304570 அழைத்து இலவச ஆலோசனை பெறலாம்.
நன்றி இப்படிக்கு
M.கிருஷ்ணன்.
MMM MARKETERS